January 8, 2020 தண்டோரா குழு
சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் எனும் பெருமையை, விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான 2ஆவது 20 ஓவர் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் களமிறங்கிய கோலி, ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் சேர்த்தார். 30 இருபது போட்டிகளில் கேப்டனாக களமிறங்கியுள்ள கோலி, அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர் எனும் பெருமையை இந்தப் போட்டியில் பெற்றார். அதேபோல இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 2663 ரன்களை குவித்துள்ள கோலி, அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். ரோகித் சர்மா இந்தப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.