September 12, 2022 தண்டோரா குழு
டி20 உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விலகியிருந்த ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.
டி20 உலக கோப்பை இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்)
கேஎல் ராகுல் (துணை கேப்டன்)
விராட் கோலி
சூர்யகுமார் யாதவ்
தீபக் ஹூடா
ரிஷப் பண்ட்
தினேஷ் கார்த்திக்
ஹர்திக் பாண்டியா
அஸ்வின்
சாஹல்
அக்சர் படேல்
பும்ரா
புவனேஸ்வர்குமார்
ஹர்ஷல் படேல்
அர்ஷ்தீப் சிங்