August 5, 2019 தண்டோரா குழு
உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 பந்தில் 67 ரன்கள் குவித்தார். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.அதன்படி, டி20 கிரிக்கெட்டில் 2422 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 107 சிக்ஸ் மூலம் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 21 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து, அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நான்கு சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.