June 22, 2017
தண்டோரா குழு
ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கி ஐசிசி அறிவித்துள்ளது.
கிரிக்கெட் போட்டியில் நீண்ட காலமாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்த் வழங்கப்படாமல் இருந்தது. நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் அசோசியேட் அணிகள் என்ற தகுதியை உயர்த்த வேண்டும் என்று ஐசிசியிடம் விண்ணப்பித்திருந்தது.
இதையடுத்து இன்று நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை வாக்களிப்புக்கு விடப்பட்டது.அனைவரும் டெஸ்ட் தகுதியளிக்க ஏகமனதாக ஆதரவளித்தனர். இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் டெஸ்ட் அந்தஸ்தது வழங்கி ஐசிசி அறிவித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்கள் தகுதியை இருநாடுகளும் பெறுகின்றன. இதனால் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை 10லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.