July 10, 2017
tamilsamayam.com
ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதக்கம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
ஆசிய தடகள போட்டிகள் ஒடிசாவில் நடைப்பெற்றது. இறுதி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் போட்டியில், யாரும் எதிர்பாரா வண்ணம் இந்தியாவின் அர்ச்சனா ஆதவ் 2 நிமிடம் 2 வினாடியில் ஓடி தங்கப்பதக்கம் வென்றார். அவரோரி போட்டியில் பங்கேற்ற மற்றொரு வீராங்கனை டிண்டு லூக்கா போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். அவர் காய்ச்சல் மற்றும் முதுகுவலியால் அவதிபட்டு வந்ததாக பயிற்சியாளர் பிடி உஷா கூறினார்.
இலங்கை வீராங்கனைகள் நிமாலி வாலிவர்ஷா மற்றும் கயந்திகா முறையே 2 மற்றும் 3வது இடத்தைப் பிடித்தனர்.
பதக்கம் பறிபோனது:
தங்கம் வென்ற மகிழ்ச்சியில் இருந்த அர்ச்சனாவின் மகிழ்ச்சி சிறிதி நேரத்தில் சிதறியது.போட்டி முடிந்து சில நிமிடங்களுக்கு பின் பேட்டியளித்த இலங்கை வீராங்கனை நிமாலி, போட்டியில் அர்ச்சனாவை நாங்கள் முந்தக் கூடாது என்பதற்காக எங்களை வழிமறித்தார் என குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, போட்டியின் வீடியோவை ஆய்வு செய்ததில், இலங்கை வீராங்கனை சொல்வது சரிதான் என கருதி அவரை போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்து, அவரின் தங்கப்பதக்கம் நிமாலிக்கு கொடுக்கப்பட்டது.