June 15, 2017
tamilsamayam.com
தடகள வீராங்கனையான பி.டி. உஷாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஐஐடி கான்பூர் முடிவு செய்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பி.டி. உஷா சர்வதேச அளவில் தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர் பய்யொலி எக்ஸ்பிரஸ், ‘இந்திய தடகளங்களின் அரசி, ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறார்.
சில துறைகளில் பெரும் சாதனைகள் படைத்து, அந்த துறையின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அந்த வகையில், தடகள விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்க மங்கை பி.டி. உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஐஐடி கான்பூர் வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஐஐடி கான்பூரின் 50வது பட்டமளிப்பு விழா நடக்கயிருக்கிறது. இதில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு 16ம் தேதி பிடி உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கயிருப்பதாக கூறப்படுகிறது. இது இவருக்கு கிடைக்கும் 2வது டாக்டர் பட்டமாகும். இதற்கு முன்னதாக கடந்த 2002ம் ஆண்டு கன்னூர் பல்கலைக்கழகம் பிடி உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, தேசிய விளையாட்டு அபிவிருத்தி நிதியிலிருந்து ரூ.8.5 கோடி செலவில் கோழிக்கூட்டில் உள்ள கிணலூரில் கட்டப்பட்ட உஷா தடகளப் பள்ளியை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.