December 31, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோஹித் சர்மா. ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருந்து வருகிறார். ரோகித் – ரித்திக்கா தம்பதியருக்கு கடந்த டிசம்பர் 13, 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. சமீபத்தில் தனது மனைவி கருவுற்று இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். ரோகித்சர்மா தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ரோகித் ஷர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்து ரித்திக்கா ஞாயிறு அன்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தந்தையான மகிழ்ச்சியை கேட்ட ரோகித்சர்மா உற்சாகத்தில் மிதந்தார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் ரோகித்சர்மா இந்தியாவுக்கு புறப்படுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.