March 29, 2017
tamil.samayam.com
விசாகப்பட்டினம்: இந்தியா ‘பி’ அணிக்கு எதிரான தியோதர் டிராபி ஃபைனலில் தினேஷ் கார்த்திக் சதம் விளாச, தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியொதர் டிராபி கிரிக்கெட் போட்டியில்,
இந்தியா ‘புளூ’, இந்தியா ‘ரெட்’ அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஃபைனலில், விஜய் ஹசாரே சாம்பியனான தமிழக அணியும், இந்தியா ’பி’ அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு, தினேஷ் கார்த்திக் (126) சதம் அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. தொடர்ந்து கடின இலக்கை துரத்திய இந்தியா ‘பி’ அணி 261 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தியா’பி’ அணி சர்பாக ஷிகர் தவான் 45 ரன்களும், குர்கீரத் மான் 64 ரன்களும் எடுத்தனர்.