March 9, 2020 தண்டோரா குழு
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் தற்போது சென்னை அணிக்காக விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்து மாஸான தமிழ் சினிமா வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை டிவீட்களாக பதிவிட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி மும்பையில் துவங்கவுள்ளது.முதல் போட்டி மார்ச் 29ம் தேதி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடக்கவுள்ளது. இதற்காக சென்னை அணி வீரர்கள் சென்னைக்கு வந்துக்கொண்டிருகிறார்கள். அந்த வகையில் ஹர்பஜன்சிங்கும் சென்னை வந்துள்ளார். இதற்காக மாஸாக தமிழில் ட்வீட்டும் செய்துள்ளார்.
ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,
வந்து இறங்கியிருக்குற இடம் சென்னை சுப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் நம்ம டீம் செம #வலிமை மாப்பி. #தளபதி ஸ்டைல் ல #தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெர்ல.#அண்ணாத்தை பார்த்து ஆட முடியுமான்னு கேள்வி செயக்கை வேற ரகமா இருக்கபோது. சேபாக் நம் #தலைவன்இருக்கிறான் மயங்காதே #WhistlePodu #CSK என்று பதிவிட்டுள்ளார்.