March 4, 2020 தண்டோரா குழு
ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி சென்ற சீசனில் ஒரு ரன் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கோப்பையை பறி கொடுத்தது. இதனால், சென்னை அணி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். சென்னை அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் சமூக வளைதளங்களில் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அணி என்றாலே ரசிகர்கள் மனதில் வருவது தோனி தான். உலகக்கோப்பைக்கு பின்னர் தோனி இந்திய அணியில் விளையாடவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சிஎஸ்கே அணியின் மகேந்திரசிங் தோனி, தனது வலைப் பயிற்சியை தொடங்குவதற்காக அண்மையில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய தல தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் உற்சாக வரவற்பு அளித்தனர். ரசிகர்களின் ஆராவாரத்திற்கு இடையில் அவர் சென்னையில் கால் பதித்தார். தல தோனியின் ரசிகர்கள், அவர் அடுத்த உலக கோப்பை வரை விளையாட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சிக்கு தோனி பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
இந்த பயணம் 2008ல் தொடங்கியது. தல என்றால் சகோதரன் என்று நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தப்பெயர்தான் எனக்கு ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது. எப்போதெல்லாம் நான் சென்னை வருகிறானோ அப்போதெல்லாம் ரசிகர்கள் என்னை தல என்றே அழைக்கிறார்கள். யாரும் என்னுடைய பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை. தல என்று அழைக்கும் போது அவர்கள் எனக்கு கொடுக்கும் மரியாதை அன்பு தான் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது.