February 16, 2018
தண்டோரா குழு
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி, தனது 600வது கேட்ச் பிடித்து அசத்தினார்.
தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில்,இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.
இந்நிலையில், கடைசி ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் இன்று நடந்து வருகிறது. இதில் தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆம்லா கேட்சை பிடித்து சாதனை படைத்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 600 கேட்ச்களை பிடித்து தோனி சாதனை படைத்துள்ளார்.