July 27, 2017
tamilsamayam.com
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 600 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 26) தொடங்கி நடைப்பெற்று வருகின்றது உள்ளது.
தவான், புஜாரா அபாரம்:
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அபினவ் முகுந்த 12 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினாலும், அடுத்து ஜோடி சேர்ந்த சிகர் தவான் மற்றும் புஜாரா இணை மிக சிறப்பாக விளையாடினார்.
தவான் 190, புஜாரா 153 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். கோலி 3 ரன்கள் மட்டும் எடுத்தார். பின்னர் வந்த ரஹானே 57, அஸ்வின் 47, சஹா 16, ஜடேஜா 15 ரன்கள் எடுத்தனர்.
ஹர்திக் பாண்டியா, சமி, உமேஷ் அபாரம்:
டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, முதல் ஆட்டத்திலேயே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை விளாசினார்.முன்னனி வீரர்கள் அவுட்டான பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 49 பந்தில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
சமி 30 பந்தில் 3 சிக்ஸர்கள் விளாசி 30 ரன்கள் எடுத்தார்.கடைசியில் உமேஷ் யாதவ் 10 பந்தில் 1 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 11 ரன்கள் எடுத்தார்.போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 600 ரன்கள் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது.