June 6, 2017
tamilsamyam.com
தாய்லாந்தில் நடைப்பெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சாய் பிரனீத் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில், முன்னாள் தாய்லாந்து பேட்மிண்டன் ஓபன் சாம்பியனான இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியுடன், இந்தியாவின் சாய் பிரனீத் போட்டியிட்டார்.
மிக விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை 17- 21 என்ற புள்ளி கணக்கில் சாய் பிரனீத் தோற்றார். பின்னர் சுதாரித்து விளையாடிய சாய் பிரனீத் அடுத்த இரண்டு செட்டை 21-18,21-,19 என்ற புள்ளி கணக்கில் அசத்தலாக வெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.
சாய் பிரனீத் வெல்லும் முதல் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் இதுவாகும். முன்னதாக சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை சாய் பிரனீத் வென்று அசத்தி இருந்தார்.