February 23, 2019 தண்டோரா குழு
டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
தலைநகர் புதுடெல்லியில் சர்வதேச துப்பக்கிச் சுடுதல் விளையாட்டு ஆணையம் (ISSF) நடத்தும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டி இன்று தொடங்கியது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா 629.3 புள்ளிகள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று தங்கம் வென்றார். மற்ற இரண்டு இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோக்தில் மற்றும் 19 வயதேயான தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை. மேலும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர்.
இந்நிலையில், தான் வென்ற தங்க பதக்கத்தை தங்க மங்கை அபூர்வி சந்தேலா புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்தார்.