January 21, 2019
தண்டோரா குழு
தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
9-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வந்தது. 41 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி, மத்திய தலைமை செயலக அணிகள் எதிர்கொண்டன, இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களுடன் துடிப்புடன் விறுவிறுப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் தமிழக அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய தமிழக வீரர் முத்துசெல்வன் கோலாக
மாற்ற தமிழக அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இவரை தொச்டர்ந்து 20-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் மத்திய தலைமைச் செயலக அணி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் வீரர் கோவிந்த் சிங் ராவத் கோல் அடிக்க இருஅணிகளும் 1-1 என சமநிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக 21-வது நிமிடத்தில் தமிழக வீரர் ராயர் வினோத்தும், 34-வது நிமிடத்தில் தலைமை செயலக அணி வீரர் கோவிந்த் சிங் ராவத்தும் கோல் அடித்து ஆட்டத்தை சுடேற்றினர். விறுவிறுப்பான் இந்த ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் தமிழக வீரர் தாமுவும், 41-வது நிமிடத்தில் மத்திய தலைமைச் செயலக அணி வீரர் ஞானவேலும் கோல் அடிக்க ஆட்டம் மீண்டும் ஆட்டம் சமநிலையை அடைந்தது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் எஞ்சிய 3 நிமிடங்களில் மிகவும் விறுவிறுப்பான இறுதி சூழலில் தமிழக அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்தது. இதை வினோதன் கோலாக மாற்ற அதுவே வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் தமிழக அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டதை தட்டி சென்றது.