January 22, 2019
தண்டோரா குழு
ஆஸ்திரேலிய தொடரை சிறப்பாக விளையாடிய இந்திய அணியை தேர்வு செய்தற்காக தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை பிசிசிஐ அறிவித்துள்ளது.
கேப்டன் விராத் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு டி20 தொடரை சமன் செய்து டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. அதைபோல், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றிகரமாக இந்தியா அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் இந்த தொடர் வெற்றியை பலரும் வெகுவாக பரடியுள்ளனர். மேலும் சாதனைப் படைத்த வீரர்கள் மற்றும்
பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை வழங்கியது.
இந்நிலையில், தற்போது சிறந்த அணிகளை தேர்வு செய்ததற்காக ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவினருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.