May 21, 2019 தண்டோரா குழு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகக் கோப்பை தொடர் மே 30-ம்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் எதிர்கொள்கிறது. விரோத் ஹோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்கிறது. இதற்கு முன்பாக கேப்டன் கோலி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் விராட் கோலி ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ரவி சாஸ்திரி,
முழு திறமையையும் வெளிப்படுத்தி விட்டால் உலகக் கோப்பை நம் கைக்குதான் வரும். ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர் தோனி.அவருக்கு நிகராக வேறு ஒருவர் வீரர் இல்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரராக திகழ்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.