February 9, 2019
தண்டோரா குழு
உலகக் கோப்பையில் தோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலமாக அமையும்” என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன், இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தோனி ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து அசத்தினார். அந்த தொடரில் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், தோனி குறித்து இந்திய வீரர் யுவராஜ் சிங் தனது கருத்தை ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னால் தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து அவர் கூறுகையில்,
டோனிக்கு சிறந்த கிரிக்கெட் அறிவு இருக்கிறது. விக்கெட் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடியவர். அந்த பணியை அவர் பல வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார். அவர் ஒரு சிறந்த கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். இளம்வீரர்களை மட்டுமல்லாமல் கேப்டன் விராட்கோலியையும் அனைத்து தருணங்களிலும் வழிகாட்டி வருகிறார். இதனால் முடிவு எடுக்கும் பணிகளுக்காகவே டோனி உலக கோப்பை அணியில் முக்கிய இடம் பெற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமைந்திருக்கிறது. வழக்கமான அவரது ஷாட்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியின் பங்களிப்பு முக்கிய இடமாக இருக்கும். 2019 உலகக் கோப்பையில் தோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலமாக அமையும்” என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.