September 2, 2020 தண்டோரா குழு
தோனியுடனும் சி.எஸ்.கே அணியுடனும் எனக்கு எவ்வித மோதலும் இல்லை என சுரேஷ் ரெய்னா விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி துபாயில் செப்டம்பர் 19ம் தேதி துவங்கவுள்ளது. இதற்காக எல்லாம் அணியும் துபாயில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னையின் அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா திடீரென இந்தியா திரும்பினார். தனது சொந்த காரணத்திற்காக இந்தியா திரும்பினார்.
ஆனால், சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் சுரேஷ் ரெய்னா மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘தோனியுடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் எனக்கு எவ்வித மோதலும் கிடையாது, சிஎஸ்கே எனது குடும்பத்தை போன்றது. வலுவான காரணம் இல்லாமல் யாரும் ரூ.12.5 கோடியை (சம்பளத் தொகை) புறக்கணிக்க மாட்டார்கள் என சுரேஷ் ரெய்னா
விளக்கமளித்துள்ளார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மேலும் 4 முதல் 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்; பயிற்சியில் தான் இருக்கிறேன் விரைவில் சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.