• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோனியை ஃபலோ பன்னுங்க! கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அறிவுரை!

December 5, 2018 தண்டோரா குழு

இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் வழியில் நடப்பது தான், சிறந்தது என்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றுவதற்கான சிறந்த வழியாக இருக்கும் என்று இந்திய கேப்டன் விராத் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி அறிவுரை கூறியுள்ளார்.

இந்திய-ஆஸ்திரேலிய இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 6ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் பயிற்சியாடத்தை இந்திய சமன் செய்துள்ளது. டெஸ்ட் போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடவுள்ள நிலையில் வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்களும் தங்களின் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது, விராட் கோலியின் தலைமையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை வெல்வது மிகவும் தேவையானதாகும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேச அளவில இந்திய அணியின் அடிப்படை தோற்றத்தையும், அணியின் புகழையும் தனது கேப்டன்ஷிப் திறமையால் முற்றிலும் மாற்றி காண்பித்தவர். களத்தில் எதிரணி எத்தனை ஸ்லெட்ஜிங் செய்தாலும் மிகவும் கூடுதலாக அனைத்தையும் சமாளிக்கும் தன்மை கொண்டவர் தோனி. தோனியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலே கோலிக்கு எளிதாக வெற்றி கிடைத்துவிடும். தோனியை பின்பற்றி நடக்க கோலி மிகச்சிறந்த உதாரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க