April 27, 2019 தண்டோரா குழு
தோனி இல்லாததது எங்களுக்கு சாதகமாக அமைந்தது என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் காய்ச்சல் காரணமாக நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் கேப்டன் தோனி ஆடவில்லை.
முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை, 17.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டியை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தொடரில் சென்னை மும்பை மோதிய இரண்டு போட்டிகளிலும் சென்னை தோல்வியுற்றது.
இது குறித்து கூறிய மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா,
டாஸ் தோற்றதும் நன்மையாக அமைந்தது. பேட்டிங்கோ, பெளலிங்கோ சிறப்பான கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்பதுதான் நோக்கம். அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி தேடிதந்தனர்.’தோனி இல்லாததது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அவரது தேவை அணிக்கு மிகவும் அவசியமானது. குறிப்பாக சேஸிங்கின் போது அவர் இல்லையெனில் அது மிகவும் கடினமானதாக அந்த அணிக்குய் மாறிவிடும்” என்றார்..
சுரேஷ் ரெய்னா கூறுகையில்,
“156 என்பது பெரிய இலக்கு அல்ல. ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தோம். பேட்டிங் இன்னும் பொறுப்பானதாக இருந்திருக்க வேண்டும். 3 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்ததும் பின்னடைவை ஏற்படுத்தியது” எனக் கூறியுள்ளார் .