August 15, 2020 தண்டோரா குழு
இந்திய அணி வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வருக்கிறார்கள்.இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், தோனியை தொடர்ந்து இந்திய அணியின் ஆல்ரவுடன்ர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.
சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டா பதிவில்,
“உங்களுடன் விளையாடிய நாள்கள் அருமையானது. முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன், உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்.