December 13, 2018
தண்டோரா குழு
உலக பேட்மிண்டன் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையை இந்திய வீராங்கனை பிவி சிந்து தோற்கடித்தார்.
முதல் எட்டு இடங்களில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் உள்ள வீரர்- வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. வரும் 16-ந்தேதி வரை நடைபெறும் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளார்.ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் இதே பிரிவின் முதல் ஆட்டத்தில் பிவி சிந்து களம் இறங்கி நடப்பு சாம்பியனான யமாகுச்சியை வீழ்த்தினார்.
பின்பு உலக பேட்மிண்டன் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையை உள்ள சீன தைபேயின் தாய் ஜூ யிங் இரண்டாவது ஆட்டத்தில் களம் இறங்கி எதிர்கொண்டார். முதல் செட்டை 14-21 என பிவி சிந்து இழந்தார். பின்னர் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2-வது செட்டை 21-16 என கைப்பற்றிய பிவி சிந்து, 3-வது செட்டை 21-18 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.