August 18, 2017
tamilsamayam.com
டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வியை ஒருநாள் தொடரின் வெற்றி மூலம் மீட்போம் என இலங்கை அணி கேப்டன் உபுல் தரங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்தது போல தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததற்கு, ஒருநாள் தொடரில் நிச்சயமாக பழிதீர்ப்போம் என இலங்கை அணி கேப்டன் உபுல் தரங்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தரங்கா கூறுகையில்,
ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை மிகவும் பலமான அணி. அதனால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான தகுதியும், திறமையும் இலங்கை வீரர்களிடம் உள்ளது. எங்களால் முடிந்த அளவு கடினமாக பாடுபடுவோம். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை. என்றார்.