September 18, 2020 தண்டோரா குழு
13-வது ஐபிஎல் டி20 சீசன் நாளை அபுதாபியில் தொடங்க உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த சீசனில் அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடக்கின்றன. அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன
இந்நிலையில், 13-வது ஐபிஎல் டி20 சீசன் நாளை அபுதாபியில் தொடங்க உள்ளது.
நாளை நடக்கும் முதல் லீக் ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளன.