November 17, 2021 தண்டோரா குழு
இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் டி 20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வென்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இன்று முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து,முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்து இந்தியா வென்றது.