March 18, 2017
tamil.samayam.com
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட், வெலிங்டனில் நடந்தது.
இதில் நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 268 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா 359 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்காவின் கேசவ் மகராஜ் 6 விக்கெட் கைப்பற்றி அசத்த, நியூசிலாந்து அணி 171 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 81 ரன்கள் என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்க வீரர்களான குக் (11), எல்கர் (17) சொதப்பலாக வெளியேறினர். இதன்பின் வந்த ஆம்லா, டுமினி நியூசிலாந்து வேகங்களை சமாளித்து விளையாட தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென் ஆப்ரிக்க அணி முன்னிலை பெற்றது.