July 14, 2017
tamilsamayam.com
பயிற்சியாளர் ரேஸில் தோல்வியடைந்த முன்னாள் அதிரடி மன்னன் சேவக், கனடாவிற்கு காத்து வாங்க சென்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே கழண்டபின், முன்னாள் இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி வரும் 2019, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரைத்தவிர, பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கானும், பேட்டிங்கில் ஆலோசகராக முன்னாள் வீரர் டிராவிட்டையும் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கும் முன், முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக்கே இந்த பதவிக்கான முன்னணியில் இருந்தார்.
இவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்நிலையில் சர்வதேச அளவில் பயிற்சி அளிக்கும் அளவுக்கு இன்னும் இவருக்கு பக்குவமில்லை என்பதால், பிசிசிஐ.,யின் வற்புறுத்தலின் பேரில் ரவி சாஸ்திரி விண்ணப்பித்து, பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இந்த ஹாட் டாப்பிக்கில் இருந்து குளிர்காய சேவக், கனடாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.