September 28, 2018
தண்டோரா குழு
நீளம் தாண்டுதலில் 8.20 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனையை ஸ்ரீஷங்கர் என்ற 19 வயது இளம் வீரர் முறியடித்துள்ளார்.
58-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கேரளாவை சேர்ந்த 19 வயது இளைஞரான ஸ்ரீஷங்கர் முரளி 8.20 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் தேசிய சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் அங்கித் ஷர்மா தாண்டிய 8.19 மீட்டரே தேசிய சாதனையாக இருந்தது. இதுமட்டுமின்றி, இந்த சீசனில் 20 வயதுக்கு உட்பட்ட வீரர்களின் அதிகபட்ச தூரம் தாண்டியது ஸ்ரீஷங்கர் தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று இருந்தும் போட்டி தொடங்குவதற்க்கு முன் சிறிய ஆபரேசன் செய்து கொண்டதால் கலந்து கொள்ள முடியாத சுழ்நிலை உருவானது. ஸ்ரீஷங்கர்இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 6-வது இடத்தையும் பிடித்துள்ளார் என்பது kurippidathகுறிப்பிடத்தக்கது.