May 30, 2017
tamilsamayam.com
மும்பையில் காலா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினியை, தனது படத்தை பார்க்க, அழைத்துள்ளார் சச்சின்.
பா ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடிக்க மும்பையில் முகாமிட்டுள்ளார் ரஜினி. இரு வாரங்கள் தங்கி இந்தப் படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும், சென்னை திரும்பும் ரஜினி, அங்கு சில காட்சிகளில் நடிக்கவுள்ளார்.
மும்பையில் உள்ள ரஜினியை சந்திக்க ஏராளமான பிரபலங்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தனது சச்சின் படத்தைக் காண ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார் சச்சின். தவிர, தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.