August 19, 2017
tamilsamayam.com
பல்கேரிய ஓபன் பேட்மின்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இளம் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
பல்கேரிய நாட்டில் உள்ள சோபியா நகரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் இலங்கையின் டினுகா கருணாரத்னாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.
புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் கோப்பை வெல்லும் உறுதியுடன் களமிறங்கிய லக்சயா சென், குரோஷியாவின் ஜோனிமிர் டர்கின்ஜாக்கை எதிர்த்து விளையாடினார்.
இப்போட்டியில் முதல் செட்டை 18–21 என போராடி தவறவிட்ட லக்சயா சென் அடுத்தடுத்த செட்களில் உத்வேகத்துடன் விளையாடினார். 2வது செட்டை 21–12 எனக் எளிதாக கைப்பற்றிய அவர், 3வது செட்டையும் 21–17 என வென்று ரசிகர்களை அசத்தினார்.
இவ்வாறு 18–21, 21–12, 21–17 என்ற கணக்கில் ஜோனிமிரை வீழ்த்திய லக்சயா சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.