June 17, 2017
tamilsamayam.com
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பைனலுக்கு முன் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் டிராவிட் அட்வைஸ் அளித்துள்ளார்.
இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சர்வதேச தரவரிசையில் ‘டாப் -8’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது.
இந்நிலையில், அரையிறுதி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணியும், இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணியும் பைனலில் மோதுகின்றன. இதில் பங்கேற்கும் இளம் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் டிராவிட் அறிவுரை அளித்துள்ளார்.
இதுகுறித்து டிராவிட் கூறுகையில்,
” இதுவரை இந்திய அணி என்ன செய்து கொண்டுள்ளதோ, அதை தொடர்ந்தாலே போது, வீணாக அணியை மாற்ற வேண்டிய அவசியமில்லை, அதனால், கோலி இந்த விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். பைனல் என்ற பதட்டத்தை அதிகரித்துக்கொள்ள கூடாது.” என்றார்.