May 31, 2019 தண்டோரா குழு
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
12வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று லண்டனில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி தனது புள்ளி கணக்கை துவங்கியது. இதையடுத்து, இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சம பலத்துடன் உள்ளதால், இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் எதிர்மறையாக வெட்ஸ் இண்டீஸ் வேகபந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 105 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வெட்ஸ் இண்டீஸ் தரப்பில் தாமஸ் விக்கெட்டுகளையும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரசல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஷாய் ஹோப் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை அளித்தார்.கிறிஸ் கெயில் 34 பந்துகளுக்கு 50 ரன்களை அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு உலகக்கோப்பை தொடருக்கான தனது முதல் வெற்றியயை பதிவு செய்தது.