June 13, 2020 தண்டோரா குழு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்பாகிஸ்தான் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.. பாகிஸ்தானில் இதுவரை 1.3 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2,500 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என் உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா சோதனை செய்து கொண்டேன்.துரதிர்ஷ்டவசமாகச் சோதனை முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள், அஃப்ரிடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, அவர் விரைவில் மீண்டுவர வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.