• Download mobile app
05 Dec 2024, ThursdayEdition - 3221
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தான் அணியை தனிமைப்படுத்த பிசிசிஐ வியூகம்!

February 25, 2019 தண்டோரா குழு

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாட கூடாது என்ற குரல் ஓங்கி வலுத்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக உலகக்கோப்பை தொடரில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு தடைவிதிக்க
வேண்டும் என்று பிசிசிஐ ஐசிசிக்கு கடிதம் எழுதவுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இதனால் இந்தியா மக்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வேலையில் இரு நாடுகளுக்கிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து, தீவிரவாதிகளை ஆதரித்து வரும் பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாட கூடாது என்று நாடு முழுக்க பலத்த குழல்கள் ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதில் நிறவெறி பிரச்னையின் போது
தென் ஆப்ரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டது போல, பாகிஸ்தான் அணியையும் தனிமைப்படுத்த வேண்டும், என பிசிசிஐயின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் வலியுறுத்தினார்.

இது குறித்து வினோத் ராய் கூறுகையில்,

பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியை புறக்கணிப்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு பதில், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். இவர்களுடன் எந்த ஒரு நாடும் கிரிக்கெட் தொடர்பு வைக்கக்கூடாது. நிறவெறி பாகுபாடு காட்டியதால் 1970-1990 வரை தென் ஆப்ரிக்க அணிக்கு தடை விதிக்கப்பட்டது. எவ்விதமான சர்வதேச போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. இதைப்போல, பாகிஸ்தான் அணியையும் மாற்ற வேண்டும். துபாயில் நடக்கவுள்ள ஐ.சி.சி., காலாண்டு கூட்டத்தில் இதுகுறித்து வலியுறுத்துவோம்,” கூறியுள்ளார்.

மேலும் படிக்க