June 21, 2017
tamilsamayam.com
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் பட்டம் வென்றதை கொண்டாடிய 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், இறுதிப்போட்டியில் மோதின. லண்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி, எதிர்பாராவிதமாக, அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பர்ஹான்புர் மாவட்டத்தில் மொகாத் என்ற இடத்தில், சில இளைஞர்கள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கோஷமிட்டும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடியுள்ளனர். இதுபற்றி உள்ளூர் மக்கள் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் 15 இளைஞர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.