July 25, 2017
tamilsamayam.com
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கரம் ஜோதி வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் லண்டனில் கடந்த ஜூலை 14 முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஜூலை 23ஆம் தேதியுடன் (இன்று) நிறைவடைகிறது.
இத்தொடரில் மகளிர் பிரிவு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கரம் ஜோதி வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளனர்.
ஆடவர் பிரிவு உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் இருவர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வசப்படுத்தியுள்ளனர். சரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும் வருண் பாட்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கின்றனர்.