• Download mobile app
05 Dec 2024, ThursdayEdition - 3221
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிசிசிஐ வெளியிட்டுள்ள வருடாந்திர வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியல் – தோனியின் பெயர் நீக்கம்

January 16, 2020 தண்டோரா குழு

பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்தண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் முக்கிய வீரர்களை, நான்கு பிரிவுகளாக பிரித்து பிசிசிஐ அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும். ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளின்கீழ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏ ப்ளஸ் பிரிவு வீரர்களுக்கு 7 கோடி ரூபாய், ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி ரூபாய், பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், சி பிரிவு வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படும்.

இந்நிலையில்,2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், தோனியின் பெயர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதனால் எதிர்காலத்தில் இந்தியா அணிக்காக தோனி களம் இறங்குவாரா என்பதில் பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏ பிளஸ் கிரேடு ஒப்பந்தத்தில் 1.விராட் கோலி, 2.ரோஹித் ஷர்மா, 3.ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் உள்ளனர். கிரேடு ஏ ஒப்பந்தத்தில் 1.ரவிச்சந்திரன் அஷ்வின், 2.ரவீந்திர ஜடேஜா, 3.புவனேஷ்வர் குமார், 4.புஜாரா, 5.அஜிங்கியா ரஹானே, 6.கே.எல்.ராகுல், 7.ஷிகர் தவான், 8.முகமது ஷமி, 9.இஷாந்த் ஷர்மா, 10.குல்தீப் யாதவ், 11.ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர். பி பிரிவு ஒப்பந்தத்தில் இருப்பவர்களுக்கு ரூ.3 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கிரேடு பி ஒப்பந்தத்தில் 1.விருத்திமான் சாஹா, 2.உமேஷ் யாதவ் 3.யுஷ்வேந்திர சாஹல் 4.ஹர்திக் பாண்டியா 5.மயங்க் அகர்வால் ஆகியோர் உள்ளனர்.

சி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கிரேடு சி ஒப்பந்தத்தில் 1.கேதர் ஜாதவ், 2.நவ்தீப் சைனி, 3.தீபக் சஹார், 4.மணீஷ் பாண்டே, 5.ஹனும விஹாரி, 6.ஷ்ரதுல் தாக்குர், 7.ஸ்ரேயாஸ் ஐயர், 8.வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.

மேலும் படிக்க