June 9, 2017
tamilsamayam.com
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரவிர் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் கனடாவின் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. ஜெர்மனியின் அன்னா லீனா மற்றும் கொலம்பியாவின் ராபர்ட் பரா இணையை இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் கனடாவின் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-6, 6-2 (12-10) என்ற செட் கணக்கில் போபண்ணா – கேப்ரியலா இணை வெற்றி பெற்றது. இந்த இணை கைப்பற்றியுள்ள முதல் கிராண்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.