November 9, 2021 தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியுள்ளது.இதைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் விவரம் கீழ் வருமாறு
ரோஹித்(கேப்டன்), ராகுல் (துணை கேப்டன்), ஆர் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், பண்ட், இஷான் கிஷான், வெங்கடேஷ் ஐயர், சாஹல், அஸ்வின், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், சிராஜ்.
விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.