October 6, 2017
tamilsamayam.com
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கும், நுபுர் நாகருக்கும் கிரேட்டர் நொய்டாவில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், 27. கடந்த 2012ல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 18 டி-20 (17 விக்கெட்), 75 ஒருநாள் (80 விக்கெட்), 18 டெஸ்ட் (45 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் இவருக்கும், நுபுர் நாகருக்கும் கிரேட்டர் நொய்டாவில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் புவனேஷ்வர், நுபுர் நாகருடன் இருப்பது போன்ற போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம், நடந்துள்ளது.
யார் இந்த நுபுர் நாகர்:
26 வயதான நுபுர் நாகர் மீரட்டின் கங்கா நகரில் பிறந்தவர். இவரது குடும்பத்தாருக்கும், புவனேஷ்வர் குமாரின் குடும்பத்தாரும் ஏற்கனவே நண்பர்களாக பழகியுள்ளனர். டேராடுனில் பள்ளிப்படிப்பை முடித்த நுபுர் நாகர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள எம்.என்.சி.,யில் பணி செய்து வருகிறார். இவரது தந்தை யாஷ்புல் சிங், ஒரு ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி.