July 20, 2017
tamilsamayam.com
இந்தியா, ஆஸ்திரேலியா பெண்கள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டி பலத்த மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் டெர்பியில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர் கொள்கிறது.
இத்தொடரின் பைனலுக்கு ஏற்கனவே இங்கிலாந்து அணி முன்னேறிவிட்ட நிலையில், அடுத்து பைனலுக்கு தகுதி பெறும் அணி யார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் டெர்பியில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில், இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் போட்டி நடக்கும் டெட்பியில் பலத்த மழை பெய்ததால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.