June 1, 2017
tamilsamayam.com
பிரெஞ்சு ஓபன் போட்டியின் நேரலை பேட்டியின் போது பெண் பத்திரிகையாளரை, இளம் டென்னிஸ் வீரர் மேக்ஸிம் ஹாமு முத்தமிட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான மேக்ஸிம் ஹாமு (21 வயது). கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் இவரை, யூரோஸ்போர்ட் பெண் செய்தியாளர் மலி தாமஸ் பேட்டி எடுத்தார்.
பேட்டியன் போது திடீரென மலியை முத்தமிட முயன்றார் மேக்ஸிம். இதற்குப் மலி மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் அவரிடமிருந்து ஒதுங்க, மீண்டும் அவரின் காதின் அருகே முத்தமிட்டார் மேக்ஸிம். மூன்று முறை அவர் மலியின் விருப்பத்துக்கு மாறாக முத்தமிட்டார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவ, மேக்ஸிமினுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தது. நேரலையில் இல்லாமல் இருந்திருந்தால் மேக்ஸிமை நான் அடித்திருப்பேன் என மலி தாமஸ் தெரிவித்தார்.