June 27, 2017
tamilsamayam.com
தொடர்ந்து இரு சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் பட்டங்களை வெற்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு ரூ.3 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி அண்மையில் இரு சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் தொடர்களில் ஆடவர ஒன்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
முதலில் சிங்கப்பூர் சூப்பர் சீரீஸ் தொடரிலும் பின்னர் ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரிலும் அவர் கோப்பை வென்றார். உலகின் தலைசிறந்த வீரர்களை எல்லாம் திணறடித்து மிரட்டிய அவர் அடுத்தடுத்து இரு பட்டங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்துள்ளார்.
இதற்காக அவரைப் பாராட்டும் விதமாக ரூ.3 லட்சம் பரிசுத்தொகையை கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமி அறிவித்துள்ளது.