February 2, 2019
தண்டோரா குழு
மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில்,இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தானா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடி இரு சதமும், 8 அரைசதமும் அடித்துள்ளார். 2ம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸிம், மேக் லேனிங் 3ம் இடமும் பிடித்துள்ளனர். நியூசிலாந்தின் எமி சாட்டர்வொயிட் 4ம் இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் மிதாலி ராஜ் 5ம் இடத்தில் உள்ளார்.
பவுலிங்கில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி 4வது இடத்திலும், பூனம் யாதவ் 8வது இடத்திலும், தீப்தி ஷர்மா 9வது இடமும் பிடித்துள்ளனர்.