March 9, 2018
tamilsamayam.com
பேங்காக்கில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை கோப்பைக்கான போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் முஷ்கன் கிரார் மற்றும் புரோமிலா டைமாரி ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஆசிய வில்வித்தை கோப்பை பேங்காக்கில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற முஷ்கன் கிரார் மற்றும் புரோமிலா டைமாரி கலப்பு மற்றும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
கலப்பு பிரிவு இறுதி போட்டியில் மலேசியாவின் சக்காரியா நாதிராவை எதிர்கொண்ட கிரார் 139-136 என்ற புள்ளிக்கணக்கில் தங்கத்தைக் கைப்பற்றினார். இதேபோல், தனிநபர் பிரிவு இறுதிபோட்டியில் பங்கேற்ற டைமரி, ரஷ்யாவின் எர்டினினிவா நட்டாலியாவை 7-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
இவர்களைத் தவிர, மது வித்வான் மற்றும் கவுரவ் டிராம்பக் லாம்பே ஆகியோர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் வெண்கலம் வென்று சாதனைப் படைத்தனர்.