April 20, 2019 தண்டோரா குழு
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.
12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 நாடுகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையில், நீண்ட நாள் தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை (WAGs) ஆகியோரை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம். அவர்களும் வீரர்கள் செல்லும் சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இந்நிலையில்,உலக கோப்பை முக்கியமான தொடர் என்பதால் இந்திய வீரர்கள் முதல் 20 நாட்கள் வரை மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.