July 26, 2017
tamilsamyam.com
வேகப்பந்து வீச்சாளராக ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் மகன் சாதிப்பார்,’ என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத். சர்வதேச அளவில் மிகச்சிறந்த பவுலராக வளம் வந்த இவர், இந்திய வீரர் சச்சினுக்கு பவுலிங் செய்வதில் கில்லாடி. சச்சினின் சிறப்பான பேட்டிங்கிற்கும், மெக்ராத்தின் பவுலிங் திறமைக்கும் ஒரு மினி சண்டையே நடக்கும்.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளராக உருவாக கடினமான பயிற்சிமேற்கொண்டுவரும் சச்சினின் மகன் அர்ஜூன் ஒரு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வருவார் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்ராத் கூறுகையில்,
சச்சின் மகனுக்கும் எனது மகனுக்கும் கிட்டத்தட்ட ஒரு வயது தான் இருக்கும் என நினைக்கிறேன். அர்ஜூன் பவுலிங் செய்து இதுவரை நான் பார்த்ததில்லை. அவர் நிச்சயம் சிற்ப்பாக பவுலிங் செய்வார் என நம்புகிறேன். சச்சின் ஒரு வேகப்பந்து வீச்சாளராக அசைப்பட்டார். அவரது மகன் அர்ஜூன் அவரை விட உயரமாக உள்ளார். கட்டாயம் அவருக்கு அது கைகொடுக்கும். சச்சினின் அர்பணிப்பு குணம் அர்ஜூனிடமும் இருந்தால், தந்தையின் கனவை நிச்சயமாக நிறைவேற்றலாம். என்றார்.