January 14, 2020 தண்டோரா குழு
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்,முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆகியோர் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களம் காண உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட ஆஸ்திரேலிய காட்டு தீயில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு உதவி செய்ய, அடுத்த மாதம் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் முன்னாள் வீரர்கள் வார்னே, ரிக்கி பாண்டிங் விளையாடுகின்றனர்.
இந்நிலையில் போட்டியில் விளையாட சச்சின் , தோனி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து கிரிக்கெட் ஜாம்பவான்களும் ஒரே போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.