February 27, 2020 தண்டோரா குழு
வரும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி, ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய வார்னருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னர், நீக்கப்பட்டார். அவருக்கு பதில் கேன் வில்லியம்சன் கேப்டனாக அணியை வழிநடத்தி வந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டனாக டேவிட் வார்னருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.